கிரிப்டோ முதலீட்டாளர்கள் மாற்று வகையில் முதலீடு செய்யத் துவங்கி விட்டார்களா?
இந்தியாவில் கிரிப்டோகரன்சி அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முதலீட்டாளர்கள், வேறு திட்டத்தில் முதலீடு செய்யத் துவங்குகிறார்கள்.
By : Bharathi Latha
இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும், ஒழுங்கு முறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வந்தது. இதுக்கு மத்தியில் கிரிப்டோகரன்சி தடை இந்தியாவில் தொடரும் என்று மத்திய அரசாங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளது எனவே கிரிப்டோகரன்சி நடவடிக்கைகளை இந்தியாவில் அங்கீகரிக்கப் படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஒரு சூழலில்பல பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ பண்டுகள் தங்களது முதலீட்டைக் கொள்கையை மாற்ற முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளனர்.
இந்த அவசரத்திற்கான காரணம், 2018ல் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் வர்த்தகத்திற்கான வங்கியியல் சேவையைத் திடீரென தடை செய்த காரணத்தால் பல முதலீட்டாளர்கள் பணத்தை எடுக்கப் போராடினர். ஆனால் தற்போது கிரிப்டோ சந்தைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படமாட்டாது எனக் கணிக்கப்பட்டாலும் பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ பண்டுகள் தங்களது முதலீட்டு கொள்கையை மாற்றத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
அம்ஸ்டீன் கேபிட்டல் என்னும் வென்சர் பண்ட் நிறுவனம் DeFi மற்றும் NFT சார்ந்த பல இந்திய திட்டத்தில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து அம்ஸ்டீன் கேபிட்டல் நிறுவனத்தின் துணை தலைவர் சச்சின் ஜெயின் கூறுகையில், "அரசின் திட்டம் என்னவென்று முழுமையாகத் தெரியவில்லை, இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு ஏதேனும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதலீட்டுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து மீண்டு வருவதற்கான பணிகளையும் திட்டங்களையும் செய்ய வேண்டி கட்டாயம் உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். 500 மில்லியன் டாலர் கடந்த வருடம் வெறும் 40 மில்லியன் டாலர் மட்டுமே கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் பிரிவில் இருக்கும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டுச் சுமார் 500 மில்லியன் டாலர் அளவில் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Nationalheraldindia