இந்தியர்கள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் காரணம் என்ன?
அதிகமான இந்தியர்கள் கிரிப்டோகரன்சி முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம்.
By : Bharathi Latha
இந்திய மக்கள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரிசர்வ் வங்கியின் LRS திட்டத்தின் வாயிலாகச் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதாவது வெறும் 30 நாட்களில் சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிலான பணத்தை வெளி நாட்டுகளுக்கு அனுப்பியுள்ளனர். 2 பில்லியன் டாலர் என்பது 3 வருடம் உச்ச நிலை என்பதும் கவனிக்கத்தக்கது. 2 பில்லியன் டாலர் இந்தியர்கள் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 1.97 பில்லியன் டாலர் தொகை வெளியேற்றத்திற்குக் கிரிப்டோ கரன்சி முதலீடு தான் காரணமெனக் கருத்து நிலவும் வேளையில், RBI இந்த 1.97 பில்லியன் டாலர் தொகை எங்குச் சென்றுள்ளது என்று விளக்கமும் அளித்துள்ளது.
கிரிப்டோ சந்தையில் முதலீடுகள் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோ முதலீட்டில் அதிகம் லாபம் கிடைக்கும் நிலையிலும், இந்தியாவில் இருந்து பெருமளவிலான தொகை வெளியேறி உள்ளது கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்திருக்கலாம் என அனுமானம் இருக்கிறது. 60% தொகை வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ரிசர்வ வங்கி அளித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கிட்டதட்ட 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையில் சுமார் 60 சதவீத தொகை வெளிநாட்டு பயணத்தின் வாயிலாகவும், படிப்புக்காகவும் சென்றுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. LRS திட்டம் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் LRS திட்டத்தின் வாயிலாகச் சுமார் 8.9 பில்லியன் டாலர் அளவிலான தொகை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 5.7 பில்லியன் டாலர் மட்டுமேயாகும். இருந்தாலும் தற்போது உள்ள நோய் தொற்றுக்கு பிறகு பெரும்பாலான இந்தியர்கள் கிரிப்டோகரென்ஸிஸ் மீது தங்களுடைய முதலீடுகளை அதிகமாக செலுத்துகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.
Input & Image courtesy:thehindubusinessline