கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி பற்றிய முக்கிய நிலைகள் !
இந்தியாவில் கிரிப்டோகரென்ஸி பதிலாக டிஜிட்டல் கரன்சிகளை உருவாக்குவதில் தீவிர கவனம்.
By : Bharathi Latha
இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்து மத்திய அரசு புதிய வர்த்தக மசோதாவை உருவாக்கி வருகிறது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி, செபி இணைந்து பல கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்காக புதிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்கான இறுதி ஒப்புதல் பிரதமரிடம் பெற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உருவாக்கப்படும் டிஜிட்டல் கரன்சிகள் உலக அளவிற்கு சமமாக இருப்பதற்கான பல்வேறு புதிய விஷயங்களும் இதில் அமல்படுத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் தற்போது அதிகக் கிரிப்டோ முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், வர்த்தகத் தளங்கள், கிரிப்டோ உற்பத்தி நிறுவனங்கள், கிரிப்டோ முதலீட்டு அமைப்புகள் அமெரிக்காவில் தான் உள்ளது. ஆயினும் அமெரிக்க அரசு கிரிப்டோ வர்த்தகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இதுவரை வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் புதிய விதிமுறைகள், கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அரசும் தயாராக இல்லை.
வளர்ந்த நாடுகள் கிரிப்டோகரன்சி அங்கீகாரம் கிடைக்காமல் அவற்றை தடை செய்து இருப்பதும் கவனிக்கத்தக்க வேண்டிய ஒரு விஷயம். சீனா 2013ல் இருந்து கிரிப்டோகரன்சி மீதான எதிர்ப்பை காட்டி வருகிறது. குறிப்பாகச் சீனா மத்திய வங்கி தொடர்ந்து விதித்து வந்த கட்டுப்பாடுகள் 2021 உச்சக்கட்டத்தை அடைந்தது மொத்த கிரிப்டோகரன்சியும் முடங்கியது. சீனா, அமெரிக்கா போன்ற அரசாங்கங்களும் கிரிப்டோகரன்சிக்கு தடை விதித்து இருக்கும் சூழ்நிலையில் இந்தியா தனக்கான ஒரு டிஜிட்டல் கரன்சிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது பாராட்டத்தக்கது.
Input & Image courtesy:Hindustantimes