Kathir News
Begin typing your search above and press return to search.

டெபிட், கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு, அமலாக இருக்கும் புதிய விதிமுறை.!

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்கள் கவனித்தில் கொள்ளவேண்டிய புதிய விதிமுறைகள்.

டெபிட், கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு, அமலாக இருக்கும் புதிய விதிமுறை.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Dec 2021 1:36 PM GMT

பொதுவாக நாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் பொழுது நம்முடைய வங்கி கணக்குகளில் குறிப்பாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை அந்த வெப்சைட் அல்லது குறிப்பிட்ட ஆன்லைன் தளங்கள் அவற்றை சேமித்து வைத்துக் கொள்ளும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஏதேனும் பொருட்களை வாங்கும் பொழுது டிஜிட்டல் பணம் செலுத்தினால், அந்த விவரங்கள் தானாகவே வைத்துக் கொள்ளும் OTP மட்டும் நீங்கள் கொடுத்து இதுவரை பேமென்ட் செய்திருப்பீர்கள். ஆனால் தற்பொழுது RBI வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் ஜனவரி 1, 2022 லிருந்து இத்தகைய நடவடிக்கைகள் தடை செய்யப்படுகிறது.


வாடிக்கையாளர்கள் நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் பொழுது உங்களுடைய ATM மற்றும் கிரெடிட் கார்டுகளின் மொத்த விபரங்களையும் நீங்கள் பதிவு செய்த ஆக வேண்டும். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் சைபர் கிரைம் என்னும் நிதி மோசடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் ரிசர்வ் வங்கி இந்த ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.


குறிப்பாக மக்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் Flipkart, Amazon, Myntra, Meesho போன்ற எந்த ஆன்லைன் தளத்திலும் ஷாப்பிங் செய்யும்போது, ​​உங்கள் 16 இலக்க கார்டு நம்பர் மற்றும் கார்டின் காலாவதி தேதி ஆகியவை இணையதளத்தில் சேமிக்கப்படாது. அதற்கு பதிலாக, 'டோக்கனைசேஷன்' எனப்படும் செயல்முறையின் மூலம் நீங்கள் கார்டு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். டோக்கனைசேஷன் என்பது, கார்டு விவரங்களுக்குப் பதிலாக ஒரு தனிப்பட்ட டோக்கன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். இது தரவு பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில், கார்டு விவரங்களை வெளிப்படுத்தாமல் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதை அனுமதிக்கிறது.

Input & Image courtesy:Livemint


Next Story
கதிர் தொகுப்பு
Trending News