பணமதிப்பிழப்பு டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க முடிந்ததா?
பணமதிப்பிழப்பு தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் உதவி கோலாக இருந்தது.
By : Bharathi Latha
இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பை அறிவித்தது. இது பல்வேறு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முழுமையாக முடிந்தும் மத்திய அரசால் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நோக்கத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடிந்ததா என்று ஒரு கேள்வி அனைவர் மனதிலும் எழும்பும்? பணமதிப்பிழப்பு மூலம் கருப்புப் பணத்தை அழித்து டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதும் மத்திய அரசு ஒரே குறிக்கோளாக இருந்தது.
ஆனால் அப்போது ஏற்பட்ட பண மதிப்பிழப்பு பொழுதும் பல்வேறு குளறுபடிகளும் நடந்துள்ளது. இதன் மூலம் மக்கள் பணத்தைப் பயன்படுத்தாமல் அமெரிக்கா, பிரிட்டன் போல டிஜிட்டல் பேமெண்ட் முறையைப் பெரிய அளவில் பயன்படுத்துவார்கள் என்று கணிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு இந்தியாவில் ஏற்பட்ட காலத்தில் போதுமான டிஜிட்டல் பேமெண்ட் வங்கிகள் இந்தியாவில் அதுவரை இல்லை. மேலும் மக்களுக்கும் அது பற்றிய தெளிவான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் கையில் உள்ள பணத்தை அவர்கள் நம்பி இருந்தார்கள். இதில் கொரோனா தொற்றுக் காலத்தில் பல இடங்களில் பணத்தின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்தது.
நாணய புழக்கத்தில் பணத்தின் அளவு இதன் எதிரொலியாக 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மொத்த நாணய புழக்கத்தில் பணத்தின் அளவு GDP-யில் 14.5 சதவீத அளவாக இருக்கிறது. 2017ஆம் நிதியாண்டில் வெறும் 8.2 சதவீதமாக இருந்த நிலையில் 10.7 சதவீதம், 11.3 சதவீதம், 12.0 சதவீதம், 14.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. 2022 நிதியாண்டில் ஏற்கனவே கடந்த ஆண்டு அளவீட்டை அடைந்துள்ள நிலையில் 16 சதவீதம் அளவீட்டை எட்டலாம். டிஜிட்டல் பேமெண்ட் சேவை இதேவேளையில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பாஸ்டேக் எனப் பலவற்றில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் இணைக்கப்பட்டு டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருகிறது.
Input & Image courtesy:Mathrubhumi