பண்டிகை காலங்களில் வெங்காயம் விலை நிச்சயம் அதிகரிக்கலாம்: அறிக்கை முடிவு !
வரவிருக்கும் பண்டிகை காலங்களில் வெங்காயம் விலை நிச்சயம் அதிகரிக்கலாம் என்று அறிக்கையின் முடிவு அறிவித்துள்ளது.
By : Bharathi Latha
வெங்காயம் விலை மீண்டும் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் உச்சத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக விழாக்கால பருவங்களில் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் உள்ளிட்ட பலவற்றின் விலை அதிகரிக்கும். இதனால் மக்கள் சாதாரண நாட்களை விட அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கிடையில் வரவிருக்கும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை உயர்ந்த நிலையில் இருக்கும். விலை அதிகரிக்கலாம் சுற்றுசூழல் மாறுபாடு காரணமாக அறுவடை தாமதமாகலாம்.
இதனால் விழாக்கால பருவத்தில் சந்தைக்கு வரத்து என்பது குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனினும் தேவை அதிகரிக்கும் இந்த பருவத்தில், பற்றாக்குறை என்பது மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என்று அறிக்கை கூறுகின்றது. பயிர்கள் உற்பத்தி பாதிப்பு டக்டே சூறாவளி காரணமாக கரீப் பருவத்தில் பயிர்கள் பயிரிடுவது தாமதமாகியது. பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் உற்பத்தியும் குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. நடப்பு ஆண்டில் வெங்காயத்தின் விலையானது கடந்த 2018வுடன் ஒப்பிடுகையில், 100% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் பயிர் நடவு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கரீப் பருவத்தில் விலை கிலோவுக்கு 30 ரூபாயினை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்பத்தி கடந்த ஆண்டை காட்டிலும் 5% குறையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. நடவு செய்வதற்கான முக்கிய மாதமான ஆகஸ்ட் மாதத்தில் மழை பற்றாகுறையால், பயிர் செய்வது தாமதமானது. இதனால் உற்பத்தியும் குறையலாம் என்று எதிர்பார்கப்படுகிறது. எனினும் இந்த நேரத்தில் விலையை கட்டுக்குள் வைக்க, ஏற்றுமதியை குறைக்கலாம். இதன் மூலம் விலை குறைய வாய்ப்புள்ளது என கிரிசில் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & image courtesy:timesofindia