இந்தியாவின் அன்னிய செலவாணி: வரலாறு காணாத உச்சம் !
அன்னிய செலவாணி மூலம் கிடைக்கும் லாபம் இந்தியாவிற்கு தற்பொழுது அதிகரித்துள்ளது.
By : Bharathi Latha
இந்தியாவின் அன்னியச் செலவாணி கையிருப்பு தற்போது வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. வெளிநாட்டின் வர்த்தகத் தொடர்புகள் மூலமாக அன்னிய செலவாணிகள் நாட்டிற்கு பெரும் பங்கு வருமானத்தை ஏற்படுத்தித் தருகின்றது. அந்த வகையில் தற்போது, ஜூலை 30 உடன் முடிந்த வாரத்தில் மட்டும் இந்திய சந்தையில் புதிதாக 9.428 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் குவித்து, அன்னிய செலாவணி அளவு வரலாறு காணாத உச்ச அளவான 620.576 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
முந்தைய வாரத்தில் அதாவது ஜூலை 23ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் வெறும் 1.581 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் மட்டுமே குவிந்த நிலையில், அடுத்த ஒரு வார காலகட்டத்தில் 9.428 பில்லியன் டாலர் குவிந்து முதலீட்டு சந்தைய ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு நாணய சொத்துப் பிரிவில் 8.596 பில்லியன் டாலர் அளவிலான புதிய முதலீடுகள் குவிந்து 576.224 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு நாணய சொத்து அளவீட்டை டாலர் மதிப்பில் குறிப்பிட்டாலும் இந்தியச் சந்தையில் யூரோ, பவுண்ட், யென் போன்ற பல வெளிநாட்டு நாணய இருப்பும் உள்ளது. இதேவேளையில் தங்க இருப்பு அளவு 760 மில்லியன் டாலர் அளவில் உயர்ந்து 37.644 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் IMF அமைப்பில் இந்தியாவுக்கான ரிசர்வ் பெசிஷன் அளவு 65 மில்லியன் டாலர் அதிகரித்து, சுமார் 5.156 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
Image courtesy: economic times