கிரிப்டோகரன்சி போன்ற தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த எந்த நாடும் முறையான வழியை கண்டுபிடிக்கவில்லை என்றும், கிரிப்டோகரன்சிகள் உட்பட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரே வழி 'உலகளாவிய கூட்டு நடவடிக்கை' என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாங்கள் தேசிய அளவில் சிந்தித்துக் கொண்டிருந்தாலும், ஒரே நேரத்தில் ஒரு உலகளாவிய செயல்முறையாக இருக்க வேண்டும். இதன் மூலம் தொழில்நுட்பத்தின் இயக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கிரிப்டோகரன்சி, தொழில்நுட்பம் சார்ந்த கட்டண முறைகள், தரவு தனியுரிமை என பல கோணங்களில் ஆராயப்பட்டு வருகிறது.
கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரத் தயாராகி வரும் நேரத்தில், நிதியமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாடுகள் தேசிய உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். அதே நேரத்தில் வர்த்தகம், முதலீடு மற்றும் பொது நலனை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக கிரிப்டோகரன்சி அல்லது பிட்காயினை எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து ஜனநாயக நாடுகளும் இதில் ஒன்றிணைந்து செயல்படுவதும், நமது இளைஞர்களை கெடுக்கக்கூடிய தவறான கைகளில் அது போய்விடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம்" என்று கூறினார்.
மேலும் ஒவ்வொரு வழக்கையும் தர்க்கரீதியான முடிவுக்கு விரைவாக எடுத்துச் செல்லுமாறு உளவுப்பிரிவு அதிகாரிகளை வலியுறுத்தினார். இதனால் கடத்தல் போன்ற பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தடுக்க முடியும். டிஆர்ஐ போன்ற ஏஜென்சிகள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் யோசனைகளை வழங்கினால், அந்த சட்டவிரோத செயல்களைத் தடுக்கலாம், என்றார்.