இந்திய பொருளாதாரத்தின் நிலையான மீட்சியே பட்ஜெட்டின் நோக்கம்!
கொரோனா தொற்றுநோயால் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலை இருந்தபோது அரசாங்கம் சில்லறை பணவீக்கத்தை 6.2% கட்டுப்படுத்தியுள்ளது.
By : Bharathi Latha
தொற்றுநோயால் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துள்ளது. ஆனால் சில்லறை பணவீக்கத்தை 6.2 சதவீதமாகக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் விவாதத்தின் போது தெரிவித்தார். ராஜ்யசபாவில் மத்திய பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலளித்த நிதியமைச்சர் இதுபற்றி கூறுகையில், "2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட், தொடர்ச்சியைக் குறிக்கிறது. வரிவிதிப்பு முன்னறிவிப்புடன் பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலையை கொண்டு வருகிறது. பொருளாதாரத்தில் நிலையான மீட்சியே பட்ஜெட்டின் நோக்கம்" என்று அவர் கூறினார்.
2008-09 உலக நிதி நெருக்கடியின் போது UPA அரசாங்கத்தின் செயல்திறனுடன் ஒப்பிடுகையில், 2008-09 நிதி நெருக்கடியின் போது சில்லறை பணவீக்கம் 9.1 சதவீதமாக இருந்ததையும், தற்பொழுது கொரோனா தொற்றுநோய்களின் போது 6.2 சதவீதமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இது பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொற்றுநோய் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சுணக்கத்தை சந்தித்ததாக அமைச்சர் கூறினார். 2008-09ல் ஏற்பட்ட உலக சரிவின் போது ஏற்பட்ட இழப்பு ரூ.2.12 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், தொற்றுநோயால் இந்தியப் பொருளாதாரம் ரூ.9.57 லட்சம் கோடி இழப்பை சந்தித்ததாக அவர் மேலும் விளக்கினார்.
"வருவாய் வழியை விட மூலதனச் செலவினம் அதிகப் பெருக்கத்தை அளிக்கிறது என்றும், அதனால் அரசாங்கம் பொருளாதாரத்தை உயர்த்த பொது மூலதனச் செலவினத்தை அதிகரித்திருப்பதாகவும் அவர் சபையில் கூறினார். கொரோனா தொற்று நோய்களின் போது பல யூனிகார்ன்களை உருவாக்கியதன் விளைவாக, ஸ்டார்ட்அப்களையும் அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது" என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறினார்.
Input & Image courtesy: Swarajya New