Kathir News
Begin typing your search above and press return to search.

6,000 கோடி செலவில் மக்களுக்கு நன்மை வழங்கும் மருத்துவமனை - நாட்டுக்காக அர்ப்பணித்த பிரதமர்!

6000 கோடி மக்களுக்கு நன்மை வழங்கும் மருத்துவமனையில் அரியானாவில் பிரதமர் இன்று திறந்து வைத்துள்ளார்.

6,000 கோடி செலவில் மக்களுக்கு நன்மை வழங்கும் மருத்துவமனை - நாட்டுக்காக அர்ப்பணித்த பிரதமர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Aug 2022 1:43 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விஜயம் செய்து இரண்டு மருத்துவமனைகளை திறந்துவைக்க உள்ளார். இந்த முக்கியமான மருத்துவமனைகள் குறிப்பாக நாட்டில் 6,000 கோடி மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. காலை 11 மணியளவில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்துள்ளார். அதன்பிறகு, பிரதமர் மொஹாலிக்குச் சென்று மதியம் 02:15 மணியளவில் முல்லன்பூரில், நியூ சண்டிகர் சாஹிப்சாதா அஜித் சிங் நகர் மாவட்டத்தில் 'ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை & ஆராய்ச்சி மையத்தை' நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.


ஹரியானாவில் ஃபரிதாபாத்தில் அமிர்தா மருத்துவமனையை பிரதமர் திறந்து வைப்பதால், எனவே அதிகமான மக்களுக்கு நவீன மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதில் இவை ஊக்கம் அளிக்கும். மாதா அமிர்தானந்தமயி மடத்தால் நிர்வகிக்கப்படும் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 2600 படுக்கைகளுடன் கூடியதாக இருக்கும். சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனை. 6000 கோடிகள் மக்களுக்கு அதிநவீன மருத்துவ வசதிகளை வழங்கும்.


பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் முயற்சியில், புதிய சண்டிகர், சாஹிப்சாதா அஜித் சிங் நகர் மாவட்டம் முல்லன்பூரில் உள்ள 'ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த மருத்துவமனை ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் உதவி பெறும் நிறுவனமான டாடா மெமோரியல் சென்டரால் 660 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. புற்றுநோய் மருத்துவமனையானது 300 படுக்கைகள் கொண்ட ஒரு மூன்றாம் நிலை மருத்துவமனையாகும். மேலும் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் மருத்துவ புற்றுநோயியல் கீமோதெரபி, இம்யூனோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்ற அனைத்து சிகிச்சை முறைகளையும் கொண்டுள்ளது.

Input & Image courtesy:PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News