இந்தியாவுடனான வர்த்தக உறவில் சீனாவை முந்தியது அமெரிக்கா - எப்படி சாத்தியமாயிற்று?
இந்தியாவுடனான வர்த்தக உறவில் சீனாவை, அமெரிக்கா எப்படி முந்தியது?
By : Bharathi Latha
இந்தியாவுடனான மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா தற்போது வரை இருந்து வந்திருக்கிறது. ஆனால் இந்த ஒரு உறவு முறையை தற்போது அமெரிக்க மாற்றியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் நன்கு பலப்பட்டு இருப்பதாகவும் நிபுணர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்க தற்போது திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2020- 21 ஆம் ஆண்டிற்கான இந்திய அமெரிக்கா உறவுகளுக்கிடையே 80.51 பில்லியன் டாலராக வர்த்தகம் தற்போது, 119.42 டாலராக மாறி உள்ளது. மேலும் இந்த வர்த்தக உறவு நீடித்து இருக்கும் மாற்றும் தொடர்ந்து இருக்கும் என்பது பொறுத்திருந்துதன் பார்க்க வேண்டும். மேலும் இந்தியா அமெரிக்காவை காண ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் 51.62 பில்லியன் டாலர் ஆக இருந்த ஏற்றுமதி, இந்த நிதியாண்டில் 76.11 பில்லியன் டாலர் ஆகவும், இறக்குமதியும் 29 பில்லியன் டாலரில் இருந்து 43.31 பில்லியன் டாலர் ஆகவும் அதிகரித்துள்ளது.
சீனாவுடனான உறவில் தற்போது இந்திய சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது மேலும் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்த சீனா தற்போது அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவிற்கான ஏற்றுமதியும் 21.18 பில்லியன் டாலரில் இருந்து 21.25 பில்லியன் டாலர் ஆக அதிகரித்தது. அதேபோல், இறக்குமதியும் 65.21 பில்லியன் டாலரில் இருந்து 94.16 பில்லியன் டாலர் ஆனது. எனவே, அமெரிக்கா வர்த்தகம் விரைவில் சீனர்கள் சார்ந்திருப்பது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy:Dinamalar news