IMF அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுனர்: பதவியில் இருந்து விலக முடிவு !
IMF அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர், இந்தியருமான கீதா கோபிநாத் அவர்கள் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார்.
By : Bharathi Latha
IMF என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனரும் மற்றும் இந்தியருமான கீதா கோபிநாத் தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியம்(IMF) சர்வதேச பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் கொள்கை வடிவமைப்பில் முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும் பல நாடுகளுக்குப் பொருளாதார வளர்ச்சி பணிகளுக்காகக் கடன் வழங்கும் பணிகளும் செய்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கீதா கோபிநாத் அவர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகம் கொள்கை ஆகியவற்றைக் குறித்துப் பல முக்கியக் கருத்துக்களை அவர் அவ்வப்போது வெளியிடுவதன் மூலம் பலரின் கவனத்தைப் பெற்றவர்.
இத்தகைய ஒரு சூழலில் IMF அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுனர் பொறுப்பில் இருந்து கீதா கோபிநாத் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தமாக அவர் IMF அமைப்பில் இருந்து வெளியேறுகிறார். இதைத் தொடர்ந்து அவர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தனது பணியைத் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். மைசூரில் பிறந்த கீதா கோபிநாத் ஒரு இந்திய அமெரிக்கர், இவர் 2019ல் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராக பணியில் சேர்வதற்கு முன்பு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ஸ்வான்ஸ்ட்ரா பொருளாதாரக் கல்லூரியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை பொருளாதார வல்லுனர் பதவியில் 3 வருடம் பணியாற்றி வந்த IMF நிர்வாகத் தலைவர் கீதா கோபிநாத் பணியிடத்தில் புதிதாக ஒருவரை நியமிக்கவும், தகுதியானவரை நியமிக்கவும் தேடுதல் பணி துவங்கியுள்ளதாகவும் IMF நிர்வாகத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் கீதா கோபிநாத் பணியை மிகப்பெரிய அளவில் பாராட்டியுள்ளார் கிறிஸ்டலினா ஜார்ஜீவா. முதல் பெண் கீதா கோபிநாத் இந்தியர் என்பது மட்டும் அல்லாமல் IMF அமைப்பின் முதல் பெண் தலைமை பொருளாதார வல்லுனர் என்பது மிக முக்கியமானதாக உள்ளது.
Input & Image courtesy:Times of India