2047-ல் இந்தியா பெரும் சக்தி வாய்ந்த நாடாக மாறும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
2047 ஆம் ஆண்டு இந்தியா பெரும் சக்தி கொண்ட பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.
By : Bharathi Latha
காஞ்சிபுரம் மாவட்டம் மேளம் கோட்டூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி ஆகிய நிறுவனத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர் இந்திய பொருளாதாரம் தொழில்நுட்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே பெற்றோர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளுக்காக அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு தொழில்நுட்ப நிபுணர்கள் அவசியம் மிகவும் இருக்கின்றது. 2047 இந்தியா பொருளாதார அளவில் மிகப் பெரும் சக்தி கொண்ட நாடாக மாற இருக்கிறது. அந்த மாற்றத்தை நாம் அடைவதற்கு பல்வேறு குறிப்புகளை நாம் பின்பற்றி ஆக வேண்டும். தொழிலுக்கு நிறுவனங்களுக்கு தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். குறிப்பாக 2028ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும். 2026 நம் நாட்டில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரிக்கும். எனவே நம் நாடு 2047 பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேற இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
உலக அளவில் 58 இந்தியாவைச் சேர்ந்த, நபர்கள்தான் பல்வேறு நிறுவனங்களின் CEO இன்று விளங்குகிறார்கள். அவர்கள் அனைவரும் இந்தியாவின் இந்திய கல்வி முறையில் பயின்றவர்கள். புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்துள்ளது. 760 மெயினர் அறிவியல் ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறி மாணவர்களிடம் உரையாற்றினார் மத்திய நிதியமைச்சர்.
Input & Image courtesy: Dinamani News