2014 ஆம் ஆண்டு பிறகு தான் இந்திய பொருளாதாரம் சுதந்திரம் அடைந்தது: எப்படி?
2014ம் ஆண்டிற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு தான் இந்திய பொருளாதாரம் சுதந்திரம் அடைந்தது.
By : Bharathi Latha
"1947 ஆம் ஆண்டு தான் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கலாம். ஆனால் நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு தான் 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார சுதந்திரம் அடைந்தது. மேலும் நவீன இந்திய வரலாறு மோடிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலம்" என்று பிரிக்கப் பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் MP தேஜஸ்வி கூறினார். மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது MP தேஜஸ்வி சூர்யா புதன்கிழமை தன்னுடைய கருத்தை தெரிவித்தார். மோடி அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வரும் வேலையின்மை பற்றிய "ஆதாரமற்ற மற்றும் தர்க்கமற்ற வாதங்களுக்கு" எதிர்க்கட்சிகளைத் தாக்கிய தேஜஸ்வி சூர்யா அவர்கள் இதுபற்றி கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் இளவரசர் தனக்கு வேலை இல்லை என்பதை, நாட்டு இளைஞர்களுக்கு வேலை இல்லை என்று குழம்புகிறார்" என்று அவர் எதிர் கட்சிக்குப் பதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பட்ஜெட் விவாதத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிப்பற்றாக்குறை குறித்த கேள்விக்கு பதிலளித்து, ஒரு தொற்றுநோய் ஆண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை 6.9% ஒரு பொறுப்பான எண்ணிக்கையாகும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கடுமையான தாக்குதலில் தேஜஸ்வி சூர்யா அவர்கள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான வம்சத்தினர் வளங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதற்காக நாட்டின் பொருளாதாரம் வேண்டுமென்றே கட்டுக்கடங்காத நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார். "வம்ச அரசியல் சோசலிசத்தை விரும்புவதற்கும் மூடிய பொருளாதாரத்தை வைத்திருப்பதற்கும் காரணம், அவர்கள் சவால் விடும் நபர்கள் வந்து தங்கள் அரசுப் பதவியில் அமர்வதை அவர்கள் விரும்பவில்லை" என்று பெங்களூரு தெற்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. சூர்யா கூறினார்.
மேலும் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவாதத்தில் லடாக்கின் பா.ஜ.க MP ஜம்யாங் செரிங் நம்கியால், இந்திய-சீனா எல்லையில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்துப் பேசினார். மேலும் "ஒரு அங்குலப் பகுதியையும் இந்தியா சீனாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை" என்று கூறினார். "காங்கிரஸ் கட்சி எப்போதும் நமது ராணுவத்தை சந்தேகிக்கின்றது" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: The hindu