இந்தியா- கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை: முக்கிய அம்சங்கள் என்ன?
இந்தியா மற்றும் கனடா இடையே இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை இன்று முதல் நடைபெற உள்ளது.
By : Bharathi Latha
இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் தன்னுடைய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பொருளாதார கூட்டாண்மை குறித்து விவாதிக்கவும் மார்ச் 10 அதாவது இன்று முதல் மார்ச் 13 தேதிகளில் இந்தியாவும், கனடாவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. கனடாவின் சர்வதேச வர்த்தகம், ஏற்றுமதி மேம்பாடு, சிறு வணிகம் மற்றும் பொருளாதார மேம்பாடு அமைச்சர் மேரி எங் வியாழன் புது தில்லிக்கு வருகை தந்து 5வது இந்தியா - கனடா வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான அமைச்சர்கள் உரையாடலை (MDTI) நடத்த உள்ளார்.
கூட்டத்திற்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை தாங்கி செயல்படுவார். கனடாவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா முன்மொழிய வாய்ப்புள்ளதாகவும், அதைத் தொடர்ந்து முழு அளவிலான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் முன்னதாக கூறியிருந்தார். இந்த கொரோனா தொற்றுநோயின் விளைவாக வீழ்ச்சியடைந்த பின்னர் 2021 இல் இருதரப்பு வர்த்தகத்தில் வலுவான மீட்பு தன்மைகள் தற்பொழுது ஏற்பட்டுள்ளன. இருதரப்பு பொருட்களின் வர்த்தகம் $6.29 பில்லியன்களை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட தற்போது 12 சதவீத வளர்ச்சியும் அதிகரித்து உள்ளது என்பதையும் குறிப்பிட்டு உள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் 11 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. ஏப்ரல் 2021-ஜனவரி 2022 இல், கனடாவிற்கான இந்திய ஏற்றுமதி $3 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு அதிகமாகும். கனடாவிற்கான முக்கிய இந்திய ஏற்றுமதிகளில் மருந்துகள் மற்றும் மருந்து பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், கடல் பொருட்கள், பருத்தி துணிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் (RMG) மற்றும் இரசாயனங்கள் போன்றவை அடங்கும். அதே சமயம் இந்தியாவிற்கான முக்கிய கனேடிய ஏற்றுமதிகளில் பருப்பு வகைகள், உரங்கள், நிலக்கரி மற்றும் கச்சா பெட்ரோலியம் போன்றவை அடங்கும். இந்தியா மற்றும் கனடா ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை (CEPA) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Input & Image courtesy: Business standard