போரினால் பாதிப்புக்குள்ளாகும் பொருளாதாரம்: GDP வளர்ச்சி விகிதம் என்ன?
GDP வளர்ச்சி விகிதம் உக்ரைன்- ரஷ்யாவில் ஏற்பட்ட போரில் தாக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும்.
By : Bharathi Latha
தற்பொழுது உலகளவில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்த பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. மேலும் உலகளாவிய நாடுகளின் பொருளாதாரம் இந்த நாடுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ரஷ்யா உக்ரைன் போன்ற நாடுகள் அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக விளங்கி வருகிறது. இவற்றின் மீதான பொருளாதாரத் தடைகள் ஒட்டுமொத்த உலகத்தின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும். இதன் காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 8.9 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது இது முந்தைய மதிப்பீட்டான 9.2 சதவீதத்தை விட குறைவாக உள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) திங்களன்று வெளியிட்ட தேசிய வருமானத்தின் மதிப்பீடுகளில் காட்டுகின்றன.
அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் GDP வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது. 2022 ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்ட FY21க்கான முதல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, இந்த நிதியாண்டிற்கான GDP கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 8.9 சதவீத GDP மதிப்பீடு நான்காவது காலாண்டில் 4.8 சதவீத வளர்ச்சி விகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது கொரோனா அலை காரணமாக கடந்த காலாண்டில் ஏற்பட்ட இழப்பைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக தற்பொழுது உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை காரணமாக நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 20.3 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, முந்தைய மதிப்பீட்டில் 20.1 சதவீதமாக இருந்ததுஇருந்தது. மேலும் ஜூலை-செப்டம்பரில் 8.5 சதவீதமாக இருந்தது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 9.2 சதவீதமாகக் கணித்திருந்தன. மேலும் விலைவாசி உயர்வும் மக்களின் வருமானத்தை பெருமளவில் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Input & Image courtesy:Indian Express