Kathir News
Begin typing your search above and press return to search.

2026 ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்: CEA உறுதி!

2026 ஆம் ஆண்டிற்குள் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக வளர்ச்சி அடையும்.

2026 ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்: CEA உறுதி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Feb 2022 2:06 PM GMT

தற்பொழுது இந்தியாவில் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள v. ஆனந்த நாகேஸ்வரன் அவர்கள் நிதி ஆண்டு 2026 க்குள் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். 8- 9 சதவீத வளர்ச்சியுடன் இந்திய பொருளாதாரம் இன்னும் 2026க்குள் அல்லது அடுத்த ஆண்டிற்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் அடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய டாலர்கள் மதிப்பில் இந்திய பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக இருக்கின்றது என்பதை நேற்று மத்திய அமைச்சர் பட்ஜெட் உரைக்கு பிறகு இவர் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இன்னும் அடுத்த ஆண்டுகளில் அல்லது 2026 ஆண்டுகளுக்குள் இந்திய பொருளாதாரம் கட்டாயம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்பதற்கு நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2019ஆம் ஆண்டில் தெரிவித்த இந்த வாக்குறுதி இன்னும் சில ஆண்டுகளில் நிறைவேற உள்ளது. மேலும் இதை அடைந்த பிறகு இந்திய பொருளாதாரம் உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8 முதல் 9.5 சதவீதத்திற்கும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் இந்த இலக்கை அடைவதற்கு இந்திய பொருளாதாரம் தற்பொழுது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்து வருகிறது.


அந்நிய செலவாணி மதிப்பை பொறுத்தவரையில் அயல் நாடுகளில் இத்தகைய மாற்றத்தை இந்திய மதிப்பு கொண்டுள்ளது என்பதைப் பொருத்து டாலர்கள் மதிப்பு தீர்மானிக்கப் படுகிறது. அந்தவகையில் தற்போது இந்திய மதிப்பு நிலையானதாக இருந்து வருகின்றது. மேலும் இதனைக் கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாம் தக்க வைத்துக் கொண்டால் 2025 மற்றும் 2026 நிதி ஆண்டில் 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நிச்சயம் என்றும் CEA அவர்கள் கூறியுள்ளார்.

Input & Image courtesy:Economic times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News