இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனைக்கு மத்திய அரசு தெரிவித்த பதில் !
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனைக்கு மத்திய அரசு தற்போது தன்னுடைய இறுதியான முடிவை தெரிவித்துள்ளது.
By : Bharathi Latha
உலகின் பணக்காரர் பட்டியலில் ஒன்றாக இருப்பவர் எலான் மஸ்க். இவருடைய முக்கிய நோக்கமாக இந்தியாவில் டெஸ்லா காரின் விற்பனையைத் துவங்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். இந்த நிலையில் தற்பொழுது மத்திய அரசிடம் அவர் வைக்கும் ஓரே ஒரு முக்கியமான கோரிக்கை வரிக் குறைப்பு என்ற விஷயம்தான். வரிக்குறைப்பு செய்வதன் மூலம் இந்தியாவில் அவர் நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்ய முடியும். இதுகுறித்து பேச டெஸ்லா அதிகாரிகள் கடந்த சில நாட்களாகப் பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கான தற்பொழுது இறுதியான பதில் கிடைத்துள்ளது. இதே வேளையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் அவர்களின் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
மத்திய அரசுக்கும் டெஸ்லா நிறுவன அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகத்தின் சார்பாக நிதி அயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் அவர்கள் இது குறித்து பேசுகையில், "இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் தொழிற்சாலையை அமைத்து உற்பத்தி தளமாக மாற்றினால் நீங்கள் கேட்கும் வரி சலுகையைக் கட்டாயம் கொடுக்கத் தயார்" என்று டெஸ்லா அதிகாரிகளுக்குப் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் கிடைக்கும் உதிரிப்பாகங்கள் போதாது. ஆனால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் பல்வேறு உதிரிப்பாகங்களைத் தயாரித்து வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் தனது உற்பத்தி தளத்திற்கு ஏற்றுமதி செய்வதாகக் கூறியது.
ஆனால் இதற்கு நிதி அயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உதிரிப்பாகங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியால் பெரிய அளவிலான வேவைவாய்ப்பு வர்த்தகத்தையும் இந்தியாவில் உருவாக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் டெஸ்லா தற்போது தனது உற்பத்தி தளத்தை அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் விரிவாக்கம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை உருவாக்க வாய்ப்பு இல்லை என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்தால் கட்டாயம் வரிச் சலுகை உண்டு என்பதை அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்திற்கு இது ஒரு சாதகமான பதிலாக தான் தெரிகிறது.
Input & Image courtesy:India Today