2031- ஆம் ஆண்டு இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக உயரும்: WEL மதிப்பீடு!
2031ஆம் ஆண்டு அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் முந்தி இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்.
By : Bharathi Latha
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்காலத்தில் இந்தியாவை மற்றொரு புதிய பாதைக்கு எடுத்து செல்லும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை. அந்த வகையில் தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரம் உயரும் போது, 2031 ஆம் ஆண்டில் இந்தியா அனைத்து ஐரோப்பிய சக்திகளையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று உலகப் பொருளாதாரக் கழகம் (WEL) தற்பொழுது மதிப்பிட்டுள்ளது.
வர இருக்கும் 2022- இல் மேலும் தனது பொருளாதாரத்தை முடுக்கிவிட்ட சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து மிகப்பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது. WEL அளித்துள்ள அறிக்கையின் படி , "2021 இல் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $7,314 ஆக உள்ளது. இது குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துகிறது. 2020 இல் GDP ஆண்டுக்கு ஆண்டு 20.1% குறைந்த அடிப்படை மற்றும் கொடிய இரண்டாவது பெருந்தொற்று அலை இருந்த பொழுதும் இந்திய பொருளாதாரம் வளர்ந்தது. அதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4% சற்றே முடக்கப்பட்டது.
இது தொடர்ந்து நான்காவது காலாண்டு விரிவாக்கத்தைக் குறிக்கிறது. ஒட்டுமொத்தமாக, பொருளாதாரம் 2021 இல் 8.5% வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2021 இல் உற்பத்தி 2019 அளவை விட 0.6% ஆக இருக்கும் என்று WEL தெரிவித்துள்ளது. மேலும் தற்பொழுது உருவெடுத்து வரும் ஓமேக்ரான் பொருளாதார மீட்சியை அச்சுறுத்துகிறது என்று WEL எச்சரித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் தடுப்பூசி இயக்கம் இருந்தபோதிலும், இந்தப் பெரும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.
Input & Image courtesy: Republicworld