Kathir News
Begin typing your search above and press return to search.

வாராக்கடன் வங்கி திட்டம்: நடைமுறைப் படுத்தும் மத்திய அரசு !

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் வாராக் கடன் வங்கி(NARLC) திட்டம்.

வாராக்கடன் வங்கி திட்டம்: நடைமுறைப் படுத்தும் மத்திய அரசு !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Sep 2021 1:04 PM GMT

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வார கடன் பிரச்சனை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதே போலத்தான் வங்கிகளுக்கு இத்தகைய நிலை ஏற்படும். பொதுத்துறை வங்கிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் வாராக் கடன் சுமையைக் குறைக்கவும், அதே வேளையில் வாராக் கடன்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற கட்டாயத்தில் மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்ட வாராக் கடன் வங்கி திட்டத்தை வேகமாக நடைமுறைப் படுத்தியுள்ளது.


குறிப்பாக இந்த NARCL என அழைக்கப்படும் இந்த வாராக் கடன் வங்கி ஜூலை மாதம் துவக்கப்பட்ட நிலையில்தான், நாடாளுமன்றத்தில் 16ஆம் தேதி இந்த அமைப்பிற்கு 30,600 கோடி ரூபாய் அளவிலான உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் NARCL அமைப்புப் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் அதாவது வங்கிகள் கொடுக்கப்பட்ட கடனை இனி வசூலிக்க முடியாது என அறிவிக்கப்பட்ட கடன்களை வசூலிக்கத் தான் இந்த அமைப்பின் முக்கிய கடமை.


பொதுவாக வங்கிகள் பெரிய தொகைக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு சொத்துக்களை அடமானமாகப் பெற்று தான் கடன் அளிக்கும். இந்நிலையில் கடனை வசூலிக்க முடியாத நிலையில் இருக்கும் கடனுக்கான சொத்துக்களை விற்பனை செய்து வங்கிகளின் சுமையைக் குறைப்பது தான் NARCL அமைப்பின் பணி. NARCL அமைப்பு 500 கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் கடன்களை மட்டுமே எடுக்க உள்ளது. அதற்குக் குறைவாக இருக்கும் கடன்களைக் கட்டாயம் எடுக்கப்போவது இல்லை என்ற கொள்கையை வைத்துள்ளது. இதுபோன்று வாராக் கடனுக்கான தீர்வு காணும் பணிகளை ஏற்கனவே வங்கிகள் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: financialexpress



Next Story
கதிர் தொகுப்பு
Trending News