இந்திய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் பணவீக்கம் அளவீடுகளின் சரிவு !
தற்பொழுது பணத்திற்காக விலை கடும் சரிவு இந்திய பொருளாதாரத்திற்கு மேலும் வலுவை சேர்க்கிறது.
By : Bharathi Latha
கடந்த மாதம் மட்டும் இந்தியாவில் உணவுப் பொருட்கள் விலை குறைந்தால் சில்லறை பணவீக்க அளவீடுகள் 5.3 சதவீதம் என்ற 4 மாத சரிவைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி அடுத்த சில காலாண்டுகளுக்குத் தனது குறைவான வட்டி விகிதத்தைத் தொடர வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே போதுமான பணப்புழக்கம் இருக்கும் காரணத்தாலும், சில்லறை பணவீக்கம் அளவீடுகள் குறைந்துள்ளதாலும் வட்டி விகிதத்தைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் ஜூலை மாதம் சில்லறை பணவீக்க அளவீடுகள் 5.3 சதவீதம் வரையில் குறைய மிக முக்கியக் காரணம் உணவு பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவு தான்.
ஜூலை மாதத்தில் 4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 3.11 சதவீதமாகக் குறைந்துள்ளது. உணவு பணவீக்கத்தில் பிரிவில் சமையல் எண்ணெய், பருப்பு, முட்டை, மாமிசம் போன்றவற்றின் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருந்தாலும், காய்கறி மீதான பணவீக்கம் 11.7 சதவீதம் சரிந்துள்ளது. இது மொத்த உணவு பணவீக்கத்தைக் குறைத்துள்ளது என்று மத்திய அரசின் கீழ் இயங்கும் புள்ளியியல் துறை அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. எனவே இதன் காரணமாக தற்பொழுது பணவீக்க அளவீடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்திருந்தால் ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தைக் குறைக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் தற்போது சில்லறை பணவீக்கம் குறைந்த நிலையிலும், மொத்த விலை பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருந்தாலும் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & image courtesy:Business standard