இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து, உலக வங்கியின் அறிக்கை !
இந்தியாவின் GDP நடப்பு ஆண்டில் உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
By : Bharathi Latha
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி விகிதமானது மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது, நடப்பு நிதியாண்டில் 8.3% வளர்ச்சியை காணலாம் என்று உலக வங்கி கணித்துள்ளது. தற்போது இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கிய நிலையில், வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் சேவைகளும் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் GDP விகிதமானது நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதமாக வளர்ச்சி காணலாம் என்று உலக வங்கி கணித்துள்ளது. இது முன்னதாக மார்ச் மாதத்தில் 1.8% சரிவை காணலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம், 9.5 சதவிகித வளர்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது. தடுப்பூசி விகிதம் மற்ற நிபுணர்களும் கிட்டத்தட்ட 10 சதவீதம் வரையில் வளர்ச்சி காணலாம் என்று கணித்து வருகின்றனர்.
பெரும்பாலும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும் ஊக்குவித்து வருகின்றது. இது உற்பத்தி விகிதத்தை அதிகரிக்கும் என்றும், இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மேற்கொண்டு வளர்ச்சியை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சுமார் 7% என்ற வலுவான வளர்ச்சியினை காணலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Input & Image courtesy:Times of India