இந்தியாவில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக் குறையினால் லாபம் பார்க்கும் நிறுவனங்கள் !
இந்தியாவில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக் குறையினால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன.
By : Bharathi Latha
இந்தியாவில் தற்பொழுது நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாடு மூலம் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு பிரச்சனை பல்வேறு நிறுவனங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் 3 மடங்கு அதிக விலைக்கு மின்சாரத்தை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சார அளவீடுகளை குறைந்துள்ள நிலையில், மக்களுக்கும் தொழிற்சாலைக்கும் போதுமான மின்சாரத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக பவர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் தற்போது தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளது.
இந்தியா முழுவதும் தற்பொழுது நிலக்கரி விலை அதிகரித்ததன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையும் அதிகரித்துள்ளது இதன் காரணமாக மின்சார உற்பத்தி செய்யும் நிலையங்களும் அதன் விலையை உயர்த்தி உள்ளன. இந்த சூழ்நிலையில் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்கள் நிலக்கரி பிரச்சனைக்கு முன்பு ஒரு யூனிட் மின்சாரம் 4 முதல் 6 ரூபாய் அளவில் மின்சாரத்தை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 16 முதல் 18 ரூபாய் வரையில் விலையை உயர்த்தியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஹிந்துஸ்தான் பவர் லிமிடெட், அதானி பவர் ஸ்டேஜ் 2 மற்றும் டீஸ்டா ஸ்டேஜ் 3 ஆகியவை ஒரு யூனிட் மின்சாரத்தை 18 ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருகிறது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் டாடா பவர், அதானி பவர், எஸ்ஸார் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் உடன் அதிகளவிலான மின்சார விநியோக ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி மூலம் இயங்கி வருகிறது.
Input & Image courtesy:Thehindu