சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பெற்ற இந்திய பொருளாதாரம் !
நோய்தொற்று காலத்திலும் கூட சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
By : Bharathi Latha
கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம் தற்போது அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. GDP, 20.1 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அளவில் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிக வளர்ச்சியை எட்டியுள்ள நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. வல்லரசு நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் கொரோனா தொற்றால் பெரும் சரிவை சந்தித்து உள்ளன.
இந்தியாவின் பொருளாதாரமும் வைரஸ் பரவலால் பாதிப்புக்குள்ளானது. அடுத்தடுத்து வந்த இரண்டு ஊரடங்குகளால் கடந்த காலாண்டுகளில் நம் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்து. இந்நிலையில் GDP, 20.1 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. சர்வதேச அளவில் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிகமான அளவில் GDP வளர்ச்சி அடைந்த நாடு இந்தியா தான். கடந்த ஆண்டில் விவசாயத் துறை பெரிய அளவில் பாதிப்பு அடையவில்லை என்றாலும் இந்த காலாண்டில் நல்ல வளர்ச்சியைக் எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா 2வது அலை பரவாமல் இருந்திருந்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்திருக்கும். அதேநேரத்தில் 3வது அலை பரவினால் இப்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் மாபெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. கொரோனா 3வது அலை பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம். அதே வேலையில் தடுப்பூசியை செலுத்துவது அதிகப்படுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Input & image courtesy:Businesstoday