இந்திய பொருளாதாரத்தின் GDP வளர்ச்சி: சீனாவை விட அதிகம்!
டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் GDP விகிதம் சீனாவை விட 5.4% வளர்ச்சி அடைந்துள்ளது.
By : Bharathi Latha
இந்தியாவின் GDP 2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் குறைந்த அடிப்படை விளைவு காரணமாக பொருளாதாரம் 20.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2021-2022 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது. டிசம்பரில் முடிவடைந்த காலாண்டிற்கான புள்ளிவிவரங்களை சமிபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், டிசம்பரில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விட குறைவாக இருந்தது என புள்ளிவிவரங்களின்படி காட்டியிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் சீனாவை விட வேகமாக வளர்ந்து வருகிறது. டிசம்பரில் GDP வளர்ச்சி முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விட குறைவாக இருந்தது. செப்டம்பரில் முடிவடைந்த 2021-22 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், பொருளாதாரம் 8.4 சதவீதமாக வளர்ந்தது. இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், 2021 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சீனாவின் பொருளாதாரம் 4 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என PTI அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய கணக்குகளின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளில், 2021-22ல் 8.9 சதவீத வளர்ச்சியை NSO கணித்துள்ளது. ஜனவரி மாதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் உர உற்பத்தி குறைந்த வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2021 டிசம்பரில் முக்கியத் துறை தொழில்கள் 4.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளன. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி விகிதம் இந்த நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரியில் 11.6 சதவீதமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: India Today