தொழில்துறை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் - நிர்மலா சீதாராமனின் திட்டம்!
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் மத்திய அமைச்சர் வேண்டுகோள்.
By : Bharathi Latha
சமீபத்தில் கோவையில் நடைபெற்ற தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி சார்பில், ஸ்டார்ட் அப் துருவ் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி இதுபற்றி கூறுகையில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் நாட்டின் இயற்கையான தொழில் மொழியின் தன்மையை மேலும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் 2021 கொள்கையாகவே மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு என்று தனி ஒதுக்கீடு என்பது எதுவும் கிடையாது என அறிவித்து இருந்தோம் என்று அவர் கூறினார். மேலும் எல்லா துறைகளிலும் தனியார் வருவதற்கான நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். அணுசக்தி துறை, விண்வெளித் துறை போன்ற பல துறைகளில் தனியார் துறையினர் வரலாம் என்று உருவாக்கப் பட்டுள்ளது.
எனவே தனியார் ரீதியாக வணிக நிறுவனங்களில் தனியார் துறை ஈடுபாடு இருக்க வேண்டும். மேலும் அவர்களை முதலில் இருந்தெல்லாம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் என்பது நாட்டின் முதுகெலும்பாக இருந்து வருகின்றன. இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தொழில்துறை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும். மத்திய அரசு தற்போது புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சலுகைகளை அளித்து வருகிறது அவற்றை பயன்படுத்தி பல்வேறு தனியார் துறைகள் சார்பில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொடர வேண்டும் என்றும் அவர் ஊக்குவித்தார்.
Input & Image courtesy:Dinamalar News