சரிவை சந்திக்கும் IRCTC: ரயில்வே அமைச்சகத்தின் திடீர் முடிவு !
ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவு காரணமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது IRCTC.
By : Bharathi Latha
தற்பொழுது இந்திய ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவின் காரணமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது IRCTC. குறிப்பாக IRCTC பங்கு விலையானது 29% சரிவினைக் கண்டது. குறைந்தபட்ச விலையானது இதுவரையில் 639.45 ரூபாய் வரையில் சென்றது. இன்றைய அதிகபட்ச விலை ரூ. 906.45 ஆக இருந்தது. எனினும் தற்போது பங்கு விலையானது 56.45 ரூபாய் குறைந்து, 857.20 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் ரயில் பயணத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவு தொடர்பான விஷயங்களை IRCTC நிறுவனம் கையாண்டு வருகிறது. இதற்காக சேவைக் கட்டணத்தையும் IRCTC வசூலித்து வருகின்றது.
மேலும் இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம் வருமானம், நவம்பர் 1ம் தேதி முதல் வசூலிக்கப்படும் கட்டணத்தில் 50% அரசிடம் வழங்கும்படி, IRCTC வழங்கும்படி ரயில்வே அமைச்சகம் ஒப்புதலை வெளியிட்டு உள்ளது. இதனையடுத்து தான் IRCTC நிறுவனத்தின் பங்கு விலையானது பெருமளவில் குறைய தொடங்கி இருக்கிறது. ஏனெனில் IRCTC நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தில் ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவு பலத்த சரிவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே நடப்பு நிதியாண்டில் கொரோனா நெருக்கடியால் பயணிகள் வருகை குறைந்தது. இதனால் IRCTCயின் வருவாயும் பலத்த சரிவினைக் கண்டது.
கடந்த சில நாட்களாக தான் இந்த பங்கின் விலையானது அதன் 52 வார உச்சத்தினையும் தொட்ட நிலையில், தற்போது தொடர்ந்து சரிந்து வருகின்றது. எப்படியிருப்பினும் ரயில்வே அமைச்சகம் தற்போது தனது முடிவினைக் கைவிட்டுள்ள நிலையில், IRCTC பங்கு விலையானது மீண்டும் ஏற்றம் காணலாம். நல்ல வாய்ப்பு உண்டு மேலும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், ரயில்வே சேவையும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதனால் வரவிருக்கும் காலாண்டில் இதன் லாபம் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம். இந்த சரிவானது மீண்டும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையலாம். இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்
Input & Image courtesy:Indian Express