ஜனவரி 2022 முதல் ஆடைகள் மற்றும் இதன் விலைகள் அதிகமாக உயரும்: காரணம் என்ன?
வருகின்ற ஜனவரி 2022-ஆம் ஆண்டு முதல் ஆடைகள் மற்றும் காலணிகள் மீதான விலைகள் அதிகரிக்கும்.
By : Bharathi Latha
ஆடைகள் மற்றும் காலாணிகள் மிதான GST வரி விகிதத்தை மத்திய அரசு 5%ல் இருந்து 12% அதிகரித்துள்ளது. இந்த GST விகிதமானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக ஜனவரிக்கு மேல் ஆடைகள் மற்றும் காலணிகள் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 2022ம் ஆண்டு முதல் ஜனவரி 1 முதல் 5%ல் இருந்து 12% ஆக GST அதிகரிக்கப்பட்டுள்ளது. GST வரி அதிகரிப்பானது ஆடைகள், செயற்கை நூல், துணிகள், போர்வைகள், டெண்ட், மேஜை துணிகள், கம்பள விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்களுக்கு 12% ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
பின்னலாடை விலை அதிகரிக்க திட்டம் குறிப்பாக நூல் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு பின்னலாடை விலையை 20% வரை உயர்த்த தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இது குறித்து வெளியான அறிக்கையில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியானது கொரோனா 2வது அலையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதன் பிறகு தற்போது ஓரளவுக்கு மீண்டு வரும் நிலையில், முக்கிய மூலப்பொருளான நூலின் விலை திடீரென கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது.
பனியன் உற்பத்தியாளர் சங்கம் இதன் காரணமாக பின்னலாடை தொழிலும், அதனை சார்ந்த உப தொழில்களும் தங்களுடைய கூலி கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதனிடையே பின்னலாடை தொழிலாளர்களுக்கான ஊதியமும் உயர்த்தி அண்மையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பின்னலாடைகளுக்கான விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய பனியன் உற்பத்தியாளர் சங்கம், பின்னலாடைகளுக்கான விலையை நவம்பர் 15-ந்தேதி முதல் 20 % வரை உயர்த்த முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:businesstodaym