Kathir News
Begin typing your search above and press return to search.

2022 ஆம் ஆண்டு உண்மையான வளர்ச்சி பாதையில் களம் இறங்கும் இந்தியா.!

அடுத்த ஆண்டு உண்மையான வளர்ச்சி பாதையை நோக்கி இந்தியாவின் பொருளாதாரம் அமையும்.

2022 ஆம் ஆண்டு உண்மையான வளர்ச்சி பாதையில் களம் இறங்கும் இந்தியா.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Dec 2021 1:47 PM GMT

கடந்த ஆண்டு அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கும். குறிப்பாக கொரோனா நோய் தொற்று காரணமாக, மக்கள் பல்வேறு வகையில் துன்பங்களை அனுபவித்து வந்தார்கள். அதிலும் சொல்ல வேண்டுமென்றால், நிதி சார்ந்த நிலைமைகள் மோசமாக இருந்தது. அதைப்போலத்தான் பொருளாதார நிலைமைகளும், இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல, உலக அளவில் உள்ள அனைத்து பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவை கண்ட ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு அறியப்படுகிறது. இவற்றை அவற்றைக் கடந்து, இந்த ஆண்டில் சில நல்ல முயற்சிகள் என்னவென்றால் தடுப்பூசி கண்டுபிடிப்பது ஒன்றே என்றும் கூறலாம். இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தடுப்பூசி என்ற கவசம் மூலமாக தற்பொழுது உருமாறும் வைரஸுக்கு எதிராக நம்மை காத்துக் கொள்ள முடிகிறது. அதேபோல தற்போது சிறிது, சிறிதாக இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சி பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று கூறலாம். அந்த வகையில் இன்னும் சில நாட்களில் அடுத்த வருடத்தை எதிர்நோக்கும் இந்திய பொருளாதாரம் புதிய வளர்ச்சி பாதையில் இனிப் புலப்படும் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


2021 ஆம் ஆண்டில் இந்தியா அடையமுடியாத பல்வேறு வளர்ச்சி பாதைகளை, இனி வரும் ஆண்டில் குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் இந்தியா நிச்சயம் அடைந்து காட்டும் என்ற நம்பிக்கையில் அறிகுறிகள் இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் GDP அளவீடு கடந்த ஆண்டைவிட வளர்ச்சி பாதையை நோக்கி 8.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அதைப்போல வரும் ஆண்டுகளில் இந்தியா இதுபோல் வளர்ச்சிகளை காணலாம் என்று நிச்சயம் அவர்கள் கூறுகிறார்கள்.

Input & Image courtesy: Livemint



Next Story
கதிர் தொகுப்பு
Trending News