அதிகரிக்கும் கிரிப்டோகரன்சி விலை: முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறதா?
கிரிப்டோகரென்ஸி விலையும், அதன் முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கிறது.
By : Bharathi Latha
பெரும்பான்மை மக்கள் கிரிப்டோகரன்சி பற்றி அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நடுத்தர நிலையில் உள்ள மக்கள் கூட, இன்று வரையில் இதில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் அதனை என்ன செய்யலாம்? என்ற குழப்பமான மன நிலையே இருந்து வருகின்றனர். அதிலும் இன்று வரை, கிரிப்டோகரன்சிகளில் முக்கிய நாணயமான பிட்காயின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்தான முறைகேடுகள், புகார்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதனை ஒழுங்குபடுத்தும் மத்திய வங்கியும், அரசும் களம் இறங்கியுள்ளது.
இந்தியாவினை பொறுத்தவரையில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளான பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என்று பல முதலீட்டு அம்சங்கள் உள்ளன. ஆனால் அவற்றிலேயே மக்கள் முதலீடு செய்ய பயந்து கொள்கின்றனர். அப்படி இருக்கும் ஒரு சூழ்நிலையில் அவர்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கிரிப்டோகரன்சிகள் முதலீட்டு செய்வது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். ஏனெனில் பங்கு சந்தை மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு என கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. ஒரு வேளை ஏதேனும் பிரச்சனை, மோசடி என்றாலும் கூட நாம் கட்டுபாட்டு வாரியத்திடம் முறையிடலாம். புகார் அளிக்கலாம். சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் கிரிப்டோவுக்கு என இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட எக்ஸ்சேன்ஞ்கள் இல்லை. தனி நபர் யாரு வேண்டுமானாலும் ஒரு கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்யலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதில் பிளாக்செயின் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகின்றது. எந்த ஒரு அடிப்படை அறிவு இல்லாமல் கிரிப்டோகரன்சி களில் முதலீடு போன்ற ஆபத்தான ஒன்றாகவும் கருதப்படுகிறது.
Input & Image courtesy: Livemint