மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்: கிடைக்கும் மிகப்பெரிய பயன்கள் என்ன?
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் கிடைக்கும் மிகப்பெரிய பயன் என்ன?
By : Bharathi Latha
60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் தங்களுடைய வயதான காலத்தில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு ஏற்றவாறு, பெரும்பாலான சேமிப்புத் திட்டங்கள் நல்ல பயனைத் தருகின்றன. பொதுவாக அனைவருமே ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிகமாக நம்பிக்கை உள்ளவர்கள். பெரிதும் பெரும்பாலானவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டி வருகிறார்கள் மேலும் இங்கு ரிஸ்க் அதிகளவு இருப்பது மிகப்பெரிய காரணமாக நன்றாக உள்ளது. அந்த வகையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மற்றவற்றை விட, அதிக பலனை தருகிறது.
இதற்காக அஞ்சல் அலுவலகங்களில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கான இதனை SCSS என்றும் கூறுவார்கள் மேலும் வயதான காலத்தில் அவர்கள் அதிகம் லாபம் தரக்கூடிய ஒரு இடமாக இது இருந்து வருகிறது இது 60 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கான பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் மேலும் சந்தாதாரர்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவர்கள் அலுவலகம் அல்லது வங்கிகளில் இதற்கான நிரந்திர வருமானத்தையும் ஈட்டலாம்.
வைப்புத்தொகையாக ரூ. 1,000 உடன் இந்த கணக்கெடுப்பின்படி, அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை சேமிக்கலாம். கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.1,000-த்தின் மடங்குகளாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் 7.4 சதவிகிதமாக வழங்கப்படுகிறது. இது மிக அதிகமான ஒன்றாகும். இதன் வட்டியானது காலாண்டு அடிப்படையில் மற்றும் டெபாசிட் தேதியிலிருந்து மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்.
Input & Image courtesy: News 18