ஓமிக்ரான் வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரத்தின் நிலைமை என்ன?
உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ன?
By : Bharathi Latha
கொரோனா வைரஸின் புதிய மாற்றமான ஓமிக்ரான் மாறுபாடு தற்போதைய உலகளாவிய அளவில் புதிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது வளர்ச்சியடைந்த நாடுகளிலும், வளர்கின்ற நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது தொடர்பாக இந்திய அரசாங்கம் தற்பொழுது அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தற்பொழுது அதிகரித்து வரும் தடுப்பூசியின் வேகம் காரணமாக ஓமிக்ரான் தாக்கம் இந்தியாவிற்கு "குறைவானதாக" இருக்கும் என்று நிதி அமைச்சக அறிக்கை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 22 உயர் அதிர்வெண் குறிகாட்டிகளில் (HFIs) 19 ஆனது, நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள இரண்டு காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார மீட்சி மேலும் பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது தற்போது உள்ள நிதியாண்டின் எஞ்சிய காலாண்டுகளில் உற்சாகமான சந்தை உணர்வுகள், விரைவான தடுப்பூசி பாதுகாப்பு, வலுவான வெளிப்புற தேவை மற்றும் அரசு மற்றும் RBI ஆகியவற்றின் தொடர்ச்சியான கொள்கை ஆதரவு ஆகியவற்றின் பின்னணியில் மேலும் பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறியது.
இருப்பினும் வைரஸ் ஒரு மாறியதை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வேகமாக வளர்ந்து வரும் தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இரண்டாவது அலையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன், கொரோனா உடன் பணிபுரிய பொருளாதாரம் சிறப்பாக தயாராக உள்ளது என்று அது மேலும் கூறியது.
Input & Image courtesy:Hindustantimes