ஓமைக்ரான் வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார தாக்கம்: நிபுணர்கள் கணிப்பு!
உருமாறிய புதிய வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
By : Bharathi Latha
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி தற்பொழுது உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தொற்றின் காரணமாக எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி குறைவாகவே இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்கள். ஏற்கனவே இது தொடர்பாக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் இந்த நோய் தொற்று காரணமாக கணிசமான அளவு குறைந்துள்ளது. வருங்காலத்தில் ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கணிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் தற்போது இவற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு வேலையில் இதன் காலம் இன்னும் சிறிது நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அரசாங்கம் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் போடும் வேலைகளை தொடங்கிவிட்டது. இதன் காரணமாகப் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகின்றன மேலும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து மத்திய அரசாங்கம் உறுதி செய்து கொண்டும் வருகிறது. உலக அளவில் சுமார் 45 க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் இது பற்றி கூறுகையில் கடந்த மாதம் இந்திய பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் ஒரு வேளையில், இந்த மாதம் அதன் வளர்ச்சி 5% ஆக கணிக்கப் பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக உருமாறிய வைரஸ் பாதிப்பு என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் அடுத்த நிதி ஆண்டிற்கான சராசரி கணிப்பு படி வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளார்கள். மேலும் இந்த உருமாறிய வைரஸ் தொற்று, முன்பு இருந்த வைரஸ் தொற்றை போல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது பொருளாதாரத்தில் தற்பொழுது சுமுகமான நிலையில் இருப்பதற்கான காரணமாக இருக்கிறது என்று அவர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து உள்ளார்கள்.
Input & Image courtesy:Economic times