ஓய்வூதியம் வழங்கும் லாபகரமான திட்டம் ! : மத்திய அரசின் அசத்தலான செயல் !
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய முதலீடு செயல்கள்.
By : Bharathi Latha
அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவது என்பது எந்த ஒரு பிரச்சினையாக இருக்காது. ஆனால், தனியார் துறை ஊழியர்கள், சுய தொழில் செய்வபர்கள் என பலருக்கும் தங்களின் ஓய்வுகாலத்தில் பென்ஷன் இல்லையே என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஆதங்கத்தினை போக்க கொண்டு வரப்பட்ட திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டம் ஓய்வுகாலத்தில் ஓய்வூதியம் என பல அம்சங்களையும் சேர்த்து வழங்கும் திட்டமாக உள்ளது.
அதிலும் அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் என்பதால், மிக பாதுகாப்பான, அதிக ரிஸ்க் இல்லாத சிறந்த திட்டமாகும். அதோடு வருவாயும் கணிசமான அளவு கொண்டு சீரான வருமானம் கொடுக்கும ஒரு திட்டமாகவும் உள்ளது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ள தேசிய ஓய்வூதிய திட்டம் சிறந்த ஆப்சனாகும். இந்தத் திட்டத்தில் ஒருவர் இரண்டு முறையில் முதலீடு செய்யலாம்.
சந்தையுடன் தொடர்பில் உள்ள இந்த திட்டத்தில் இரண்டு முறையில் உங்களது பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று பங்கு சந்தை மற்றும் கடன் சந்தை, அதாவது அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் இதற்காக கணக்கினை தொடங்கும்போது 75% வரையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து கொள்ள முடியும். வருவாய் அதிகம் இது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை விட அதிக வருமானம் பெற முடியும். அரசின் திட்டமாக இருப்பதால், மிக பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.
Image courtesy: india news