PLI திட்டத்தின் கீழ் மின்னணு உற்பத்திக்கான இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!
By : Janani
இரண்டாம் கட்டமாகப் பெரியளவிலான PLI திட்டத்தின் கீழ் எலெக்ரோனிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பங்களை அரசாங்கம் வரவேற்கத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் உற்பத்தியானது மதர்போர்ட், செமிகாண்டக்ட்ர் சாதனங்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொண்டுள்ளது.
இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் மார்ச் 31 வரை வரவேற்கப்படவுள்ளன, மேலும் இதற்கான நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"PLI திட்டத்தின் கீழ் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை வரவேற்கத் தொடங்கப்பட்டுள்ளது. PLI திட்டத்துக்கான இரண்டாம் கட்ட சுற்றுக்காலம் நான்கு ஆண்டுகளாக இருக்கும் மற்றும் ஏப்ரல் 1 2021 முதல் உதவித்தொகை வழங்கப்படும்," என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட சுற்றுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31 வரை வரவேற்கப்பட்டது. அது போஸ்க்கோண், விஸ்ட்ரோன்,சாம்சங் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் பங்கேற்பினை ஈர்த்தது. மேலும் உள்ளூர் நிறுவனங்கள் லாவா, டிக்ஸ்ன் போன்றவை 11,000 கோடி வரை முதலீட்டை ஈர்த்தது. முதல் கட்டத்தில் மொபைல் உற்பத்தியைக் குறிவைத்து 20 நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டாலும், இரண்டாம் சுற்றில் 30 தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்கவுள்ளது.
புதிய வழிகாட்டுதலில், டிஸ்கிரேட் செமிகண்டக்டர் சாதனங்கள், டயோட்கல், ATMP, சர்குயிட் போர்டு, காப்பாசிட்டர் போன்றவற்றை PLI யின் இரண்டாம் சுற்றில் உற்பத்தி செய்ய நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கிடையில் PLI திட்டத்தின் கீழ் முதற்சுற்றில் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இரண்டாம் சுற்றில் அனுமதிக்கப்படாது.