Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளின் கிசான் கடன் அட்டை - பயிர் காப்பீடு திட்டம் வழிகாட்டல்

விவசாயிகளின் கிசான் கடன் அட்டை மற்றும் பயிர் காப்பீடு திட்டம் பற்றிய வழிகாட்டல் நிகழ்ச்சி.

விவசாயிகளின் கிசான் கடன் அட்டை - பயிர் காப்பீடு திட்டம் வழிகாட்டல்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 April 2022 1:12 AM GMT

தேனி மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரத்தில் மத்திய அரசின் கிசான் கடன் அட்டை திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கிசான் மேளாவில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். மத்திய அரசின் காரணமாக, விவசாயிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கிசான் கடன் அட்டை திட்டம் மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


சின்னமனூர் அருகே உள்ள காமாட்சி அம்மன் புறத்தில் ரிஷி வித்யா மகேந்திரா சார்பில் 75 ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நம்முடைய விவசாயிகளின் பங்களிப்பிற்கு நமது முக்கியத்துவம் என்ற தலைப்பில் உழவர் பெருவிழா மற்றும் விவசாயிகளிடையே விஞ்ஞானத்தை ஊக்குவிப்பது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வங்கியின் மேலாளர் அகிலன் கலந்து கொண்டு விவசாயிகளிடையே வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.


அப்போது அவர் கூறுகையில், கிசான் கடன் அட்டையின் மூலம் 1.60 லட்சம் முதல் 3 லட்சம் வரை கடனாக பெற்று விவசாயம் செய்வதற்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்கவும் மேற்கொள்ளும் வகையில் இந்த கடன் அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு 22 சதவீத வட்டி மானியமும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை இடர்பாடுகள் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக பயிர் காப்பீடு திட்டமும் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News