Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலக சேமிப்பு திட்டம் !

அஞ்சலகத்தில் இந்த சேமிப்பு திட்டம் தற்போது மத்திய அரசால் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலக சேமிப்பு திட்டம் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Oct 2021 12:43 PM GMT

ஒருவருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு சேமிப்பது மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. நமக்கு இக்கட்டான நேரங்களில் கைகளில் பணம் இல்லாத ஒரு சூழல் ஏற்படும்பொழுது, இந்த சேமிப்புகள் நமக்கு பேருதவியாக இருக்கின்றன. அவற்றை ஊக்குவிக்கும் விதமாக தற்போது மத்திய அரசின் சார்பில் அஞ்சலக சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நீங்கள் வங்கியில் வைப்பு நிதி வைத்திருந்தாலும் அதில் வரும் வட்டி குறைவாக உள்ளது. இதனை தாண்டி இதே அளவு பாதுகாப்பான திட்டம் என்னவென்றால், அது அஞ்சலக திட்டங்கள் தான்.


இன்று வங்கிகளை விட அஞ்சலகத்தில் வட்டி விகிதம் அதிகம். அணுகும் முறையும் எளிது. இந்தியா முழுவதும் சேவையை பெற்றுக் கொள்ள முடியும். இன்றைய காலக்கட்டத்தில் வங்கி சேவையினை போலவே அஞ்சலகமும் அனைத்து சேவைகளையும் கொடுக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சல் துறையின் தொடர்வைப்புக் கணக்கு திட்டம் பற்றித் தான். அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி இது ஒரு பாதுகாப்பான, சிறுசேமிப்பு திட்டம் எனலாம். ஏனெனில் இது அஞ்சலக துறையானது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசு அமைப்பாகும். இன்றைய காலகட்டத்தில் முன்னணி வங்கிகள் கூட வட்டி விகிதத்தினை குறைவாகத் தான் வழங்கி வருகின்றன.


அதனுடன் ஒப்பிடும்போது தொடர் வைப்பு நிதி திட்டத்தில் வட்டி விகிதம் என்பது சற்று அதிகம் தான். இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். இங்கு அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும் எனில், இந்த திட்டத்தில் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி கணக்கினை தொடங்க வேண்டும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்கள் உள்ளன. எனினும் இதனை நீட்டித்து கொள்ளலாம். வட்டி விகிதம் இங்கு நீங்கள் 100 ரூபாயைக் கூட சேமிக்க முடியும். 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த கணக்கினை பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். இது குழந்தைகளுக்கும் சேமிப்பும் பழக்கத்தினை உருவாக்கும் என்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Input & Image courtesy:India news



Next Story
கதிர் தொகுப்பு
Trending News