Kathir News
Begin typing your search above and press return to search.

குறைந்த வட்டியில் PPF திட்டம் மூலம் அசத்தலான வாய்ப்புகள் !

கடன் பெறுவதற்கு அதிலும் மிக குறைந்த வட்டி விகிதத்தில் வாங்க உதவும் அஞ்சலக PPF திட்டம்.

குறைந்த வட்டியில் PPF திட்டம் மூலம் அசத்தலான வாய்ப்புகள் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Oct 2021 12:48 PM GMT

வருங்கால வைப்பு நிதி என்று அழைக்கப்படும் PPF திட்டம் பல்வேறு வாய்ப்புகளை பயனாளர்களுக்கு அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்குவது மிக எளிதான விஷயமாக இருந்தாலும், வட்டி விகிதம் என்பது மிக அதிகமாக இருக்கும். அவற்றோடு பல கட்டணங்கள் என சேரும்போது இன்னும் அதிகமாக இருக்கும். ஆனால் வட்டி குறைவாக கடன் கிடைத்தால், அதுவும் விரைவில் கிடைக்கும் என்றால் அது நல்ல விஷயம் தான். குறிப்பாக பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்று சொல்லப்படும் இந்த PPF மூலம் நீங்கள் வரி செலுத்தும் பொறுப்பில் இருந்து விடுபடலாம்.


இன்றைய காலகட்டத்தில் தனி நபர் கடன் என்றாலே நல்ல விஷயம் தான். உதாரணத்திற்கு தனி நபர் கடன் என்றாலே வட்டி விகிதம் குறைந்தபட்சம் 8% கட்டணம், மற்ற கட்டணங்கள் என அனைத்தும் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கும். குறைவான வட்டியில் கடன் அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் PPF திட்டம் வைத்திருப்பவர்கள் தான். இந்த திட்டத்தில் கடன் வாங்க முடியும். இது ஒரு சிறந்த முதலீட்டு திட்டம் மட்டும் அல்ல, சேமிப்பு கருவியாக இருக்கிறது எல்லாவற்றிற்றுக்கும் மேலாக அவசர காலகட்டத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ள உதவும் சிறந்து எனலாம். இதனால்தான் இந்த திட்டம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.


இந்த PPF கணக்கு வைத்திருப்பவர்கள் தொடங்கப்பட்டு 3 ஆண்டு முதல் 6 ஆண்டு வரையில் இந்த கணக்கிக்கு எதிராக கடன் பெற்றுக் கொள்ளலாம். இப்படி பெறும் கடனுக்கு வட்டி விகிதம் என்பது வெறும் 1% மட்டும்தான். இது ஒரு குறுகிய கால கடனாகும். அதோடு மற்ற தனி நபர் கடன், அடமானக் கடன், நகைக் கடன் இப்படி பல கடன்களுடன் ஒப்பிடும்போது வட்டி என்பது மிக மிக குறைவு என்பதாலும், எளிதில் பெற முடியும் என்பதால் சிறந்த கடனாகவும் பார்க்கப்படுகிறது. கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் கடன் கிடைப்பதே பெரிய விஷயம். அப்படி நெருக்கடியான அவசர காலகட்டத்தில் 1% வட்டியில் கடன் கிடைப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். ஆக அப்படி பார்க்கையில் இது உண்மையில் அவசர தேவைக்கு மிக பயனுள்ள ஒரு விஷயமாகவும் இருக்கிறது. எனினும் இதனை மிக அவசர தேவைக்கு பயன்படுத்துவதே சிறந்தது.

Input & Image courtesy:Zee news



Next Story
கதிர் தொகுப்பு
Trending News