Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய மாற்றங்களை எதிர் நோக்கும் ஆன்லைன் பரிவர்த்தனைகள்: RBI முடிவு.!

ஆன்லைன் பரிவர்த்தனைகளை கொடுக்கப்படும் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

புதிய மாற்றங்களை எதிர் நோக்கும் ஆன்லைன் பரிவர்த்தனைகள்: RBI முடிவு.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Dec 2021 1:45 PM GMT

இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகளில் பல புதிய மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால் அதே அளவு பிரச்சனைகளும் வளர்ந்துள்ளன. தற்பொழுது உலகம் மாறிக் கொண்டிருக்கும், நவீன காலகட்டங்களுக்கு ஏற்றவாறு நம்முடைய பழக்க வழக்கங்களும் மாறி உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க பங்கு வங்கி நடவடிக்கைகளில் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், முதலில் நாம் வங்கிகளில் போய் பணம் எடுப்போம். ஆனால் தற்போது உள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்து பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்த பயன்படுத்துகிறோம். தொழில் நுட்பம் என்பது ஒரு புறம் நமது வேலைகளை மிகவும் சுலபமாக மாற்றினாலும், மறுபுறம் சைபர் கிரைம் பிரச்சனைகளும் மிக அதிகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது.


எனவே அத்தகைய பிரச்சனைகளில் இருந்து தவிர்த்து வாடிக்கையாளர்களை காக்கும் முக்கிய பொறுப்பு RBI-க்கு உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை அப்படி ஒரு பாதுகாப்பு நடவடிக்கையினை தான் RBI எடுத்துள்ளது. நீங்கள் ATM கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை செய்பவராக இருந்தால், நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான். பொதுவாக ஆன்லைனில் ஆடர் செய்த ஆன்லைன் பேமெண்ட் செய்யும் பொழுது ஒரு முறை உங்களுடைய அக்கவுண்ட் நம்பரை சேவ் செய்த பிறகு, ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆட்சி செய்யும் பொழுது அதற்கு பதிலாக பாஸ்போர்ட் மற்றும் CVV நம்பர் கொடுத்து பணம் செலுத்தி உள்ளீர்கள்.


ஆனால் இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் விவரங்கள் கொடுக்க வேண்டும். இனி நீங்கள் ATM கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக பொருட்களை கடைக்காரர்கள் அல்லது விற்பனையாளார்கள் உங்களது விவரங்களை சேமித்து வைத்திருப்பர். ஆனால் இனி அப்படி வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்க முடியாது. இதை RBI-யை வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி 2022 இன்று முதல் மாற்றம் செய்கிறது. அதாவது வாடிக்கையாளர் ஒவ்வொரு முறையும் விவரங்களை பதிவிட வேண்டியிருக்கும். அதை நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் 16 இலக்கு வங்கி நீங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.

Input & Image courtesy:Hindustantimes


Next Story
கதிர் தொகுப்பு
Trending News