Kathir News
Begin typing your search above and press return to search.

டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் முயற்சியில் RBI: கொண்டு வரும் புதிய மாற்றங்கள் !

டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் முயற்சியில் RBI ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் முயற்சியில் RBI: கொண்டு வரும் புதிய மாற்றங்கள் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Dec 2021 1:44 PM GMT

கிரிப்டோகரென்ஸி இந்தியாவில் தடை செய்ததை தொடர்ந்து இந்தியாவில் தனக்கென்று டிஜிட்டல் கரன்சி களை உருவாக்கும் முயற்சியில் RBI களமிறங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, டிஜிட்டல் கரன்சிகளை கொண்டுவரும் பல்வேறு முயற்சிகளில் RBI-யை தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. இந்தியாவில் பணப்புழக்கத்தை மொத்தமாக மாற்றப்போகும் டிஜிட்டல் கரன்சியை உருவாக்க உள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.


RBI தற்பொழுது உலக நாடுகளுக்கு இணையாக ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், தற்போது ரீடைல் மற்றும் ஹோல்சேல் கணக்குகளுக்குத் தனித்தனி டிஜிட்டல் கரன்சிகளை CBDC உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு விதமான கரன்சிகளில் எந்தக் கரன்சி முதலில் தயாராகிறதோ? அதை முதலில் சோதனை செய்ய முடிவும் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக RBI துணை கவர்னரான ரபி சங்கர் கூறுகையில், "ஹோல்சேல் சந்தைக்கான டிஜிட்டல் கரன்சிக்கான பணிகளைக் கிட்டதட்ட முடிந்தது. ஆனால் ரீடைல் கரன்சியை உருவாக்குவது சற்றுக் கடினமாக இருக்கும் காரணத்தால் கூடுதலாகக் காலம் தேவைப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி (CBDC) என்பது காகிதத்தில் இருக்கும் ரூபாயை டிஜிட்டல் முறையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தான். எப்படிப் பணப்புழக்கத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வருகிறதோ? டிஜிட்டல் கரன்சியில் பல மோசடிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் Firewall உருவாக்க வேண்டும் என்று RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.


கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்கு படுத்துவதற்கான சட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் நேரத்தில் இந்த முன்னேற்றங்கள் வந்துள்ளன. மேலும், அமெரிக்க மத்திய வங்கி மற்றும் சீனாவின் மக்கள் வங்கி போன்ற பிற மத்திய வங்கிகளும் தங்கள் சொந்த டிஜிட்டல் நாணயங்களைத் திட்டமிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் உள்ள டிஜிட்டல் கரன்சி களுக்கு இணையாக இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி இருக்கும் என்பது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்.

Input &Image courtesy:Indianexpress


Next Story
கதிர் தொகுப்பு
Trending News