ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி செயல்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது?
ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி குறித்த செயல்பாடுகளில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.
By : Bharathi Latha
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கிரிப்டோகரன்சி களில் முதலீடு செய்வதில் தொடர்ந்து, கிரிப்டோகரென்ஸி ஒழுங்கு படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து உள்ளது. கிரிப்டோகரன்சியை ஒழுங்கு படுத்துவதற்கான அரசின் வரைவு மசோதா, பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப் படவில்லை. ஏனெனில் இதுவரை எந்த ஒரு கட்டமைப்பும் இல்லாத இந்த டிஜிட்டல் கரன்சிகளை கண்காணிக்கும் முறைகள் குறித்து மத்திய அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
"கிரிப்டோகரன்சியைத் தடை செய்வது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் இதை யார் தோற்றுவித்தவர்? என்று கூட தீர்மானிக்க முடியாது" என்று விவாதங்களை நன்கு அறிந்த ஒரு அதிகாரி கூறினார். எந்தவொரு அதிகாரியையும் எச்சரிக்காமல் மக்கள் நாணயங்களை அணுக VPN ஐப் பயன்படுத்தலாம் என்று அதிகாரி கூறினார். இந்திய ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியில் செயல்படும் நிலையில், அரசாங்கம் அதன் அனைத்து விருப்பங்களையும் தொடர்ந்து பரிசீலித்து வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
தற்பொழுது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட மசோதா, "அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய மசோதாவின் கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2021" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் முழுமையான தடை முன்மொழியப்பட்ட கடைசி வரைவுக்கு மாறாக சில வழிகளை வழங்கலாம். அதாவது கிரிப்டோகரன்சிக்கு பதிலாக மக்கள் டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்த அனுமதிக்கலாம். மேலும் அது முற்றிலும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது, மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி(CBDC) என்ற பெயரில் கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஆனால் இவற்றை முற்றிலும் பாதுகாப்பாக உருவாக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
Input & Image courtesy:Hindustantimes