சீர்திருத்தங்கள் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் உயர்த்தும்: அறிக்கை முடிவு!
உரிய சீர்திருத்தங்கள் இந்தியப் பொருளாதாரத்தை 2022- ஆம் ஆண்டுகளில் உயர்த்தும்.
By : Bharathi Latha
நம் கடந்து வந்த நோய் தொற்று பாதையை கருத்தில் கொண்டு பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதன் மூலமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய முடியும் என்று தற்பொழுது அறிக்கை முடிவு கூறியுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய் தொற்று காரணமாக சிறிய சரிவை கண்டது. ஆனால் தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 2022- ஆம் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் குறிப்பிட்ட துறையில் சீர்திருத்தங்களை செய்வதன் மூலமாக மேலும் வளர்ச்சியடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தற்பொழுது IMF கருத்துப்படி, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் வரும் ஆண்டுகளில் 9.5 சதவீதம் முதல் 10.5 சதவீதம் வரையிலான இருக்கும் என்று IMF தனது கருத்தை பதிவு செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதங்களில் இருந்து மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக அவர்கள் பண்டிகையின் போது மக்களின் வாங்கும் சக்தி பெருமளவில் வெளிப்பட்டது. இது இந்திய பொருளாதாரத்தின் நிதி நிலைமைகளை மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்புகின்றனர் என்பதை எடுத்துரைக்கும் ஒரு அறிகுறியாகும்.
இருந்தாலும் வரும் காலத்தில் எத்தகைய மாற்றங்கள் வரும் என்பதை கணிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். எனவே உருமாறிய நோய்தொற்று ஒரு புறம் இருந்தாலும், சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய நேரமிது. வாங்கும் சக்தி படைத்த மக்கள் பணத்தை அதிகமாக செலவிடும் நிலையில் இருக்கிறார்கள். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் பணவீக்கத்தை சரியான முறையில் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Input & Image courtesy:Moneycontrol