வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் : RBI அறிவிப்பு !
வங்கிகளுக்கான ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி தற்பொழுது குறுகிய கால கடன் களுக்காக வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமுமில்லை. தற்போதுள்ள 4% வட்டி விகிதமே தொடரும். ரிவர்ஸ் ரெப்போவும் 3.35 சதவிகிதமாக தொடரும்.
கொரோனா 2வது அலையின் தாக்கத்தில் இருந்து பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. 2021- 2022-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5% ஆக இருக்கும். குறிப்பாக இந்த முகத்தோற்றம் காலத்தில் பொருளாதாரம் மிகவும் பாதித்தது ஆனால் தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. எனவே உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பொருளாதாரம் சிறிது சிறிதாக மேலோங்கி வருகிறது.
மேலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிதிக் கட்டமைப்பு செயல்படுகிறது. 2022-23 முதல் காலாண்டுக்கான பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். குறிப்பாக குறுகிய கால கடன்களுக்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் மற்ற வங்கிகளுக்கு சாதகமான முறையில் தான் வழங்கப்படுகின்றது.
Image courtesy: money control