இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்த சவுதி அரேபியா !
மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக திகழும் சவுதி அரேபியா தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
By : Bharathi Latha
உலகில் அதிகளவு எண்ணெய் வளங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா அறியப்படுகிறது. அத்தகைய சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ தற்பொழுது இந்தியாவில் தனது முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் எண்ணெய் சப்ளை மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவுதி அராம்கோவின், மூத்த துணைத் தலைவர் முகமது ஓய் அல் கஹ்தானியின் சமீபத்தில் இதுபற்றி கூறுகையில், "இந்தியாவின் இந்தியா முழுவதும் பரவலாக முதலீடு செய்வது எங்களின் நோக்கம்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏற்கனவே ரிலையன்ஸ் உடன் சவுதி அராம்கோ நிறுவனம் இந்தியாவில் தனது முதலீட்டினை தொடங்கியுள்ள நிலையில், எண்ணெய் வணிகம் மட்டும் அல்ல, கெமிக்கல் வணிகத்தினையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடனும் கூட்டணி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா இந்தியாவிற்கு தேவையான எரிபொருளை சப்ளை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்தியா உலகிலேயே 3-வது மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளது.
இந்தியாவில் சர்வதேச அளவிலான மொத்த உற்பத்தியில், சுமார் 40% இந்தியா இறக்குமதி செய்கிறது. ஆக சர்வதேச எண்ணெய் சந்தையில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. மேலும் மிக சமீபத்தில் நடந்த ஒரு எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் உலகளாவிய எண்ணெய் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள், சவுதி அராம்கோவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அமீன் நாசர் உடனான இணையவழி கூட்டத்தில், உற்பத்தினையினை அதிகரிக்க கூறியதோடு, சப்ளையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இப்படி இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கும் சவுதி அரேபியாவின் நோக்கம் இந்தியாவிற்கு பயனுள்ள வகையில் அமைய இருக்கிறது.
Input & Image courtesy:Thehindu