Kathir News
Begin typing your search above and press return to search.

14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிக்கும் தீப்பெட்டி விலை: தொழிலாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்துமா?

வருகின்ற டிசம்பர் மாதத்தில் தீப்பெட்டியின் விலை அதிகரிப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமா? ஒரு பார்வை.

14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிக்கும் தீப்பெட்டி விலை: தொழிலாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்துமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Oct 2021 1:31 PM GMT

தீப்பெட்டி உற்பத்திக்கான சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாகவும், உற்பத்தி செலவு அதிகரிப்பின் காரணமாக இது நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டியின் விலையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது வருகின்ற டிசம்பர் 1 தேதி முதல் அமலுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்வானது 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக அதிகரிக்கபோவதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மூலதன பொருட்கள் விலை ஏற்கனவே எரிபொருளுக்கான மூலதன பொருட்களின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரெட் பாஸ்பரஸின் விலை 425 ரூபாயில் இருந்து, 810 ரூபாயாக அதிகரித்துள்ளது. மெழுகு விலையானது 58 ரூபாயில் இருந்து, 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.


எனவே இத்தகைய மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பது தான் தீப்பெட்டியின் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். இதற்கியிடையில் இதை தவிர பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவும் உற்பத்தியாளர்களின் செலவினை அதிகரிக்க வழி வகுத்துள்ளது. இதற்கிடையில் தீப்பெட்டி விலையை அதிகரிக்க உற்பத்தியாளார்கள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் தீப்பெட்டி தொழில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் இடங்களான சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர், வேலூர் மற்றும் தர்மபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது.


இந்த நிலையில் இது விலை உயர்வு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவும். விலைவாசி அதிகரிப்பு ஏற்கனவே சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் பொருட்கள் விலை என அனைத்தும் உச்சம் தொட்டுள்ளது. எனினும் அனைத்து விலைவாசியும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தீப்பெட்டி உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் நஷ்டம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த விலை அதிகரிப்பானது மேற்கொண்டு உற்பத்தியாளர்களின் சுமையும், தொழிலாளர்களின் சுமையும் குறைய வாய்ப்பாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy:Business standard




Next Story
கதிர் தொகுப்பு
Trending News