இலங்கையில் அவசர நிலையை அறிவித்த அதிபர் - காரணம் என்ன?
இலங்கையில் அவசர நிலையை அறிவித்த அதிபர் காரணம் என்ன?
By : Bharathi Latha
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். மேலும் அந்நாட்டு அரச பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ச்சியான எதிரொலித்து வருகிறது. அந்த வகையில் நாடாளுமன்றம் அருகே பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். போராட்டம் வலுவான தன் காரணமாக இலங்கையில் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்த உத்தரவை அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் அரசிற்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வலுவான நிலையில், அதை தொடர்ந்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை கலைக்கும் முயற்சியில் அங்குள்ள போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கூட்டங்களை கலைக்க முற்படுவார்கள். நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.
மேலும் இதன் காரணமாக அதிபரின் திடீர் அறிவிப்பு நாடு தழுவிய போராட்டங்களை தொடர்ந்து வலுவாக தூண்டியது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக அங்குள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் மேலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அதன் காரணமாக வேலையும் முடக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News 18