இந்தியாவில் பிரம்மாண்டமாக களமிறங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் !
இந்தியாவில் தற்பொழுது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகவும் பிரம்மாண்டமாக களமிறங்கியுள்ளன.
By : Bharathi Latha
இந்திய IT மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் வரலாறு காணாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் ஊழியர்களின் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் அதிகப்படியான ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாட்டின் முன்னணி IT சேவை நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் IT முதல் அனைத்து பிரிவுகளிலும் அதிகளவிலான ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் தற்போது சந்தையில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகமாகவும் வருகிறது.
2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீட்டை திரட்டி, தற்போது முதலீடுகளை நிறுவனங்கள் கையில் வந்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தனது வர்த்தக விரிவாக்கத்தை வேகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்புகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன. இந்தியாவில் புதிதாக முதலீட்டை ஈர்த்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 8 மாத நிலவரம்படி, சுமார் 243 முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் செய்த ஆய்வின் படி, 2021ஆம் ஆண்டில் முதல் 8 மாதத்தில் மட்டும் சுமார் கிட்டத்தட்ட 55,000 பேரை புதிதாக பணியில் அமர்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இதன் எண்ணிக்கை வெறும் 30,000 ஆக இருந்தது. 80 சதவீதம் அதிகரிப்பு இதுமட்டும் அல்லாமல் கடந்த 20 மாதத்தில் அதாவது ஜனவரி 2020 முதல் இந்த 243 நிறுவனங்களின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும் பண்டிகை காலம் நெருங்கியுள்ள நேரத்தில் எளிதாக இது சாத்தியப்படும் என கணக்கிடப் படுகிறது. மொத்த முதலீட்டு அளவு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீட்டு அளவுகள் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு மட்டும் சுமார் 250 முதலீடுகள் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் குவிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள பல்வேறு சலுகைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News 18