ஸ்டீல் உற்பத்தியில் இந்தியா என்னவாக இருக்கும்?
சீனாவில் ஏற்பட்டு வரும் தொற்று காரணமாக உற்பத்தி பெருமளவு சரிவை ஏற்படுத்தி உள்ளது. இது இந்திய நிறுவனங்களுக்கு சாதகமா?
By : Bharathi Latha
தற்போது சீனாவின் நிலவி வருகின்ற சோதனைகளை வைத்து பார்க்கும் பொழுது அவர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக பொருளாதார ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் முன்னதாக கொரோனாவின் தாக்கம், அதன் பின்னர் பொருளாதார மந்தம், தற்போது நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக, அங்கு கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது. இதன் காரணமாக சீன நிறுவனங்களின் உற்பத்தி திறன் மோசமான பாதிப்பினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு சாதகம்.
இதனால் தற்பொழுது இனி வரும் காலாண்டுகளிலும் சீனாவின் உற்பத்தி விகிதமானது, பெரும் சரிவினை காணலாம் என்ற அச்சமும் இருந்து வருகிறது. இதற்கு பல முக்கிய காரணிகள் உள்ள நிலையில், இந்த சரிவானது இந்திய நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. J.S.டபள்யூ ஸ்டீல் இரும்பு உற்பத்தி நிறுவனமான தனது இரண்டாவது காலாண்டு அறிக்கையில், வருவாயானது முந்தைய காலண்டுடன் ஒப்பிடும்போது 350% அதிகரித்து, 7,179 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தேவை அதிகமாக இருப்பதே இதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது என்று கூறலாம்.
நிலக்கரி விலையேற்றம் தற்போது நிலக்கரியின் விலையானது 300% மேலாக அதிகரித்து, டன்னுக்கு 120 டாலரில் இருந்து, டன்னுக்கு 400 டாலராக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ஸ்கிராப் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் உலோக விலைகள் மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக, இத்தகைய உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களின் விலை அதிகரிப்பு, இந்திய நிறுவனங்களில் தேவையை அதிகரித்துள்ளது.
Input & Image courtesy:Livemint