கொரோனா தடுப்பூசிக்கு எதிராக மக்களிடம் பயம் உருவாக்கும் வகையில் திரித்து செய்தி வெளியிடும் புதிய தலைமுறை ஊடகம்!

நோய்த்தொற்று உள்ளவர்களிடமோ அல்லது அறிகுறிகள் தோன்றுவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே ஒருவரிடம் இருந்து பரவக்கூடிய தொற்றுநோய்க்கான அபாயத்தை கொரோனா தடுப்பூசி குறைக்கும்.
குறிப்பாக நோயாளிகள் மற்றும் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள், முதலுதவி மற்றும் பிற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் அவசியம் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.
COVID-19 தடுப்பூசிகள் SARs-COV-2 நோய்த்தொற்றுக்கு எதிராக நமது உடல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகின்றன. இது கொடிய நோய்க்கிருமிகளுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை புதுப்பிக்கிறது மற்றும் எதிர்காலத்திற்கு நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.
தற்போது பரவி வரும் வைரஸ் இளம் வயதினர் மற்றும் வயதானவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் சமமாக பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் அல்லது உங்களுக்கு வேறு எந்த உடல் நல பிரச்சனைகளும் இதற்கு முன்பு ஏற்படவில்லை என்பதனால் தடுப்பூசி போடாமல் இருக்கலாம் என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது.
நீங்கள் எந்த சூழ்நிலையிலும் கொரோனாவால் பாதிக்கப்படலாம். எனவே, வைரஸில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.
இந்த சூழலில் புதிய தலைமுறை செய்தி நிறுவனம் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக மக்களிடம் பயம் உருவாக்கும் விதமாக, கடந்த 10 நாட்களுக்கு மேல் செய்தியை திரித்து வெளியிடுகிறார்கள். புகார் அளிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, பல செய்திகள் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.