கொரோனா குறித்து தனிநபர் செய்தி பகிர்வது குற்றமா ? வைரல் செய்தி உண்மையா?
By : Janani
தற்போது வாட்ஸ் ஆப் மூலம் பேரிடர் மேலாண்மை சட்டம் விதித்துள்ளதாகவும் அது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த சட்டத்தின் படி, நாட்டில் உள்ள நபர்கள் அல்லது குடிமக்கள் கொரோனா தொற்று குறித்த எந்தவொரு செய்தியையும் பரப்ப தடைவிதிப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு செய்வது குற்றமாகவும் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த செய்தியைச் சரிபார்த்த போது இந்த வைரல் செய்தி போலியானது என்றும் இவ்வாறு பேரிடம் மேலாண்மை சட்டம் என்று கொண்டுவரவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டமானது கொரோனா தொற்றைச் சமாளிக்கக் கொண்டுவரப்பட்டது. இந்த பேரிடர் குறித்த செய்தியைப் பகிர எந்த நபருக்கும் தடைவிதிக்கப்படவில்லை.
மார்ச் 31 2020 இல் உச்சநீதிமன்றம் பேரிடர்-மேலாண்மை சட்டத்தைக் கொண்டுவந்தது. இதுமூலம் கொரோனா தொற்று குறித்த தவறான செய்தியையோ அல்லது செய்திகள் மூலம் அச்சத்தை ஏற்படுத்த ஒருவர் முயன்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சட்டம் தெரிவிக்கின்றது. அந்த நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
அரசாங்க ஊழியர்களைத் தவிர்த்து எந்த தனி நபரும் கொரோனா தொற்று குறித்த செய்தியைப் பரப்ப அனுமதியில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டுத் தவறானது ஆகும்.
மேலும் இந்த குற்றச்சாட்டானது PIB யாழும் மறுக்கப்பட்டுள்ளது. "அரசு ஊழியர்களைத் தவிர கொரோனா தொற்று குறித்து எந்த தனி நபரும் செய்தி பரப்ப அனுமதியில்லை என்று பகிரப்படும் செய்தி தவறானது," என்று PIB டிவிட்டில் தெரிவித்திருந்தது.
இது பல ஊடகத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாட்ஸ் ஆப் செய்தி தவறானது என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களுக்குப் பகிரப்படும் செய்தியின் உண்மையைக் கண்டறிந்து மற்றவர்களுக்குப் பகிரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
source: https://newsmeter.in/fact-check/posting-updates-on-covid-19-is-not-crime-viral-message-is-fake-676953